FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 06:40:27 PM
-
எந்த ஜாதக அமைவு உள்ளவர் கலைஞனாக பிரகாசிப்பார்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நம்மிடம் வந்து சினிமாவில் முன்னேற முடியுமா? டைரக்டராக வரமுடியுமா? கதாசிரியராக வரமுடியுமா? என்று பலதரப்பட்டவர்கள் வருகிறார்கள். சிலரைப் பார்த்தீர்களென்றால் 30 வருடம் உதவி இயக்குனர்களாகவே இருந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். சிலர் நுழைந்த 3 வருடத்திலேயே மிகப்பெரிய சாதிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
கலைத்துறையைப் பொறுத்தவரை படைப்புத் திறன் நன்றாக இருக்க வேண்டும். இதுதான் மிக முக்கியம். இதற்கு முக்கியம் பூர்வ புண்ணியஸ்தானம். 5ஆம் இடம். இதுவும் நன்றாக இருக்க வேண்டும். லக்னாதிபதியும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த இரண்டும் நன்றாக இருந்துவிட்டால் அவர்கள் கலைஞனாக வரமுடியும்.
முக்கியமாக, சந்திரன் கலாபுதன். ஆயக்கலைகள் 64கிற்கும் சந்திரன்தான் மிக முக்கியம். ஏனென்றால் சந்திரன்தான் மனம். உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொள்வது. சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்றால் வசனமும் பேசியாக வேண்டும். எழுதிக் கொடுத்தால் அதை சரியாக ஏற்ற இறக்கத்துடன் சொல்ல வேண்டும். இது எல்லாவற்றிற்கும் சந்திரன்தான். அதனால் சந்தினும் நன்றாக இருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்துவிட்டு கலைத்துறை உள்ளது. கலைத்துறை இல்லாதது என்று சொல்கிறோம்.
இதைப்போல சிலருக்கு சந்திரன் நன்றாக இருக்கும். சுக்ரன், புதன் நன்றாக இருக்கும். லக்னாதிபதி, பூர்வ கும்பம் நன்றாக இருந்தாலும். அந்த தசை சரியாக வராது. அந்த தசை சரியாக வராதபட்சத்தில் அவர்களால் பிரகாசிக்க முடியாது. இதுபோன்ற சில விஷயங்கள் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஒருவரைப் பார்த்த உடனேயே கண்டுபிடித்துவிடலாம்.