FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 06:36:59 PM

Title: சூரிய குலம், சந்திர குலம் என்றால்?
Post by: Global Angel on July 29, 2012, 06:36:59 PM
ஆதி காலத்தில், புராண காலத்தில் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று சொல்கிறார்கள், நீங்கள் மாநிலத்திற்கு கூட, தமிழ்நாடு சூரியனை பிரதானமாகவும், மற்ற மாநிலத்தில் சந்திரனை பிரதானமாக வைத்து செய்கிறார்கள் என்று சொன்னீர்கள். சூரிய குலம், சந்திர குலம் என்பது கூட இதன் அடிப்படையிலானதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இது சாஸ்திர அடிப்படையில் வரக்கூடியது. சிவ பெருமான் சூரிய வம்சம், கிருஷ்ண பரமாத்மா, விஷ்ணுவோட அம்சத்தை சந்திராம்சம் என்று சொல்வார்கள். முன்பு தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று எல்லாவற்றையும் ஐந்தாக்கினார்கள். தமிழர்கள் வாழ்வியல் தன்மையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, பூமி, சுற்றியிருக்கக் கூடிய அண்டம், பிண்டம் அதையும் ஐந்தாக்கிப் பார்த்தார்கள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றிற்கு என்னென்ன கடவுள், பாலை என்றால் வன தேவதைகள் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். அதுபோலதான் சூரிய குலம், சந்திர குலத்தையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். சிவன் அழிக்கும் சக்தி உள்ளவர் என்பதால் சூரிய வம்சம். சந்திரன் ஆக்கும் சக்தி, திருமால் என்பதால் சந்திர குலத்திற்கும் வைத்தார்கள்.