FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 06:26:36 PM

Title: கை ரேகை பார்ப்பதில் ஆண்களுக்கு வலது கை, பெண்களுக்கு இடது கை என பார்ப்பது ஏன்?
Post by: Global Angel on July 29, 2012, 06:26:36 PM

பொதுவாக உடற் கூறுகளில் நாம் சக்தி, சிவம் என்று சொல்கிறோம். சூரியக் கலை, சந்திரக் கலை அதுபோல, இரண்டையும் நீரையும், நெருப்பையும் கலந்ததுதான் எல்லாமே. நீர், நெருப்பு. இதைத்தான் நெருப்பை வந்து சிவனுக்கும், நீரை அம்பாளுக்கும் அதாவது, தனிந்த நிலை தன்னிலை, தனியா நிலை ஆண் நிலை என்று மாறி மாறி வரும்.

கை ரேகையைப் பொறுத்தவரையில் அவரவர்களை அந்தந்த நிலையிலேயே பார்க்கிறோம். சக்தி வந்து இடப்பாகம். சிவன் வந்து வலப்பாகம். அந்த வகையில் பார்க்கும் போது அந்த இயல்பான நிலையிலேயே பார்க்கிறோம்.

பெண்களைப் பொறுத்தவரையில், முக்கியமான கிரகங்கள் என்று சொன்னால் சந்திரனும், சுக்ரனும். பெண் ஆதிக்க கிரகங்கள் என்பது இந்த இரண்டு கிரகங்கள்தான்.

சந்திரன் மேடு என்பது சுண்டுவிரலிற்கு மிகவும் கீழே இருப்பது. கடைசி கட்டத்தில் இருப்பது, சுக்ரன் மேட்டிற்கு அடுத்ததாக இருப்பது. அதுதான் சந்திர மேடு. இந்த அமைப்புகள் என்பது இடக்கையைப் பார்க்கும் போது முழுமையாகத் தெரியும்.

சந்திரனையும், சுக்ரனையும் இடக்கையைப் பார்க்கும் போது அதனுடைய ஆதிக்கத்தை நாம் முழுமையாக உணரலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் பார்ப்பது என்னவென்றால், யாராயிருந்தாலும் வலக்கை என்பது நிகழ்காலம் (பிரசண்ட்), இடக்கை என்பது எதிர்காலம் (·பியூச்சர்). அதுதான் உண்மை.

பெண்கள்தான் எல்லாவற்றிற்குமே பிரதானம். அதனால்தான் அவர்களுடைய இடக்கை பார்த்தால்தான் ஆடவருடைய உண்மையான நிலை தெரியவரும்.

ஒரு கணவன், மனைவி வருகிறார்கள். மனைவியினுடைய இடக்கையைப் பார்த்தாலே கணவனுடைய வலக்கையில் என்ன இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.