FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 06, 2011, 09:31:44 AM

Title: என் சுவாசமாய் நீ
Post by: ஸ்ருதி on August 06, 2011, 09:31:44 AM

என் சுவாசமாய் நீ.....
உன்னையே எண்ணினேன்
என்னையே மறந்தேன்.....

இலை மூடும் பனிப்போல்
என் பாசத்தை
எனக்குள் மூடினேன்...
சொல்ல வார்த்தைகள் இருந்தும்
சொல்ல இயலாமல் நான்....

பாறையில் பூக்கும் பூவாய்
என்னுள் ஒரு ஆனந்தம்......
தனிமையில் சிரிக்கிறேன்.....
உன்னையே தேடி அலையும்
என் நெஞ்சம்.....

மௌனம் என்னை விட்டு
வெளியேறாமல் தவிக்கிறது...
என்னை சுற்றி நிகழும்
நிஜங்கள் கூட நிழலாய்
என் முன் வலம் வருகிறது....

காற்றில் இருந்து
என் சுவாசத்தை தனியே
பிரித்து கொடு....
என் சுவாசமாய் நீ..... 

நீ!! காற்றோடு கலப்பதை
தாங்கும் இதயம்
எனக்கு இல்லை........ ;) ;)   
Title: Re: என் சுவாசமாய் நீ
Post by: Swetha on August 06, 2011, 12:23:03 PM
Hi da shruthi chellam kavidhai superb  :) ena pathi danae eludirka  :P
Title: Re: என் சுவாசமாய் நீ
Post by: ஸ்ருதி on August 06, 2011, 02:23:46 PM
இலை மூடும் பனிப்போல்என் பாசத்தைஉனக்குள் Swetha மூடினேன்...  :-* ;)
Title: Re: என் சுவாசமாய் நீ
Post by: Global Angel on August 06, 2011, 05:29:36 PM
inimayaanaa kavithai... ;)
Title: Re: என் சுவாசமாய் நீ
Post by: ஸ்ருதி on August 07, 2011, 04:05:11 PM
thanks Globle angel ;)