FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 28, 2012, 06:26:08 PM

Title: ~ சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!! ~
Post by: MysteRy on July 28, 2012, 06:26:08 PM
சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa2.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2Fs720x720%2F553517_248785665226941_2048100205_n.jpg&hash=c16cb778195a119849f722b83fd7d9ca48239e6e) (http://www.friendstamilchat.com)


சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது .சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்

ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி