FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 27, 2012, 08:27:35 PM

Title: தேர்தலில் இறுதி நிமிடத்தில் வெற்றி கைமாறுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
Post by: Global Angel on July 27, 2012, 08:27:35 PM

கே‌ள்‌வி : தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது வெற்றி பெற்று விடுவார் என நம்பப்படும் நிலையில், அவர் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவுகிறார்?

இது ஒருபுறம் என்றால், வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கூட தோல்வி அடைந்தவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது வெற்றியைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார்? அல்லது அதிகார துஷ்பிரயோகம் காரணமாக வெற்றி பறிக்கப்படுகிறது? இவற்றை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?

‌வி‌த்யாதர‌ன் பதில்: ஒரு வேட்பாளரின் வெற்றியை அவரது ஜாதகம் மட்டுமே தீர்மானித்துவிடாது. பல்வேறு காரணிகளால் அவரது வெற்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை முதலில் தெரிவித்து விடுகிறேன்.

அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நேரத்தில் நடக்கும் ஓரை மற்றும் முடிவு அறிவிக்கப்படும் நேரத்தில் உள்ள ஓரை முக்கிய காரணியாக விளங்குகிறது. உதாரணமாக முடிவு அறிவிக்கப்படும் நேரத்தில் சனி ஓரை, தேய்பிறை சந்திரன் ஓரை, நீச்ச புதன் ஓரை, வக்ரம் பெற்ற கிரகத்தின் ஓரை இருந்தால் வெற்றி/தோல்வியில் திடீர் மாற்றம் ஏற்படும்.
குரு ஓரை நல்லதுதான். ஆனால் வக்ரம் பெற்ற குருவின் ஓரை கெடுதலை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் முடிவுகள் மாற்றப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் உள்ள நட்சத்திரம் வெற்றி பெறுவார் (தொடர்ந்து முன்னணியில் உள்ளவர்) என்று எதிர்பார்க்கப்படும் வேட்பாளரை விட, எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு சாதகமாக இருந்தால் இறுதி நேரத்தில்/நிமிடத்தில் வெற்றி கைமாறவும் வாய்ப்புள்ளது.

இது எல்லாவற்றையும் விட வாக்கு எண்ணிக்கையில் முதன்மைப் பெற்றிருந்தாலும், அன்றைய தினத்தில் தசா புக்தி அல்லது தசை முடியும் தருவாய் இருந்தாலும் இறுதி நொடியில் வெற்றி கைமாறிப் போகும்.

ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவாரா? மாட்டாரா? என்பதை அறிய அவரது ஜாதகத்தை மட்டும் பார்த்தால் போதாது. அவரது இரத்த உறவுகளின் ஜாதகத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக என்னிடம் வந்த ஒரு வேட்பாளருக்கு தற்போது கிரக நிலை சரியில்லை என்பதால் அவர் தோல்வியைத் தழுவ வேண்டும்.

ஆனால், அவரது மகனின் ஜாதகம் அப்போது மிகச் சிறப்பாக இருந்தது. குரு பலன், செவ்வாய் நன்றாக இருந்தது. போதாததற்கு சுக்கிர தசையும் நடந்தது. எனவே மனுத்தாக்கல் செய்ய மகனையும் அழைத்துச் செல்லுங்கள்.

மனுவில் கையெழுத்திட்டு அதனை அலுவலரிடம் சேர்ப்பிக்கும் போது மகனையும் அந்த மனுவை பிடிக்கச் சொல்லுங்கள் என்று கூறினேன். பிரசாரத்தின் போதும் மகனை முதலில் அனுப்பி வைப்பதுடன், தொகுதி உலாவின் போது மகனை கூடவே வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். இதன் காரணமாக அவருக்கு வெற்றி சாத்தியமானது.

ஒருவேளை வேட்பாளருக்கு நல்ல நிலையில் ஜாதகம் இருந்து, அவரது இரத்த உறவுகளில் ஒருவருக்கு மோசமான தசை/ தசாபுக்தி நடந்தால் அவர் இறுதி நேரத்தில் தோல்வியடைவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினின் ஜாதகம் தற்போது வலுவாக உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் மேற்கொள்ள முடியாத நிலைமை இருந்ததால், அவரது மகனான ஸ்டாலின் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பலனாக தி.மு.க. கூட்டணி கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி 28 தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால் சனியின் ஆதிக்கத்தைக் கொண்ட முதலவர் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருந்தாலும், சனி- சனிதான் என்ற வாக்கிற்கு ஏற்ப அவர் (முதல்வர்) பிரசாரம் செய்த திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணி தோல்வியைத் தழுவியது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.