FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 27, 2012, 08:01:30 PM
-
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 10ஆம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 10ஆம் இடத்தின் அதிபதி 10இல் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதேபோல் 10 இடத்து அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு உத்யோகம் பெறலாம். அதற்கடுத்தபடியாக 10ஆம் இடத்தில் குரு இருந்தால், மரியாதை தரும் அரசு பதவிகள் கிடைக்கும்.
ஆனால் முக்கியமாக லக்னாதிபதி நன்றாக அமைந்தால்தான், அரசு உத்தியோகம் கூட தடையின்றி அமையும் வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் லக்னாதிபதியை விட 3ஆம் இடத்து அதிபதி நன்றாக அமைந்திருந்தால் அவர் சொந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்.
மேலும், 3ஆம் இடத்து அதிபதியும், 10ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் சிறிது காலம் அரசு பணியில் இருந்து விட்டு, அதன் பின்னர் அதிலிருந்து விலகி அரசு சம்பந்தமான தொழில்களை (கான்ட்ராக்ட்) நடத்தி பொருள் ஈட்டுவார்.
ஒரு சிலருக்கு மேற்கூறிய பலன்கள் அவர்களின் ஜாதகத்தில் காணப்பட்டாலும், அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது. இதற்கு காரணம் சூரியனுக்கு எதிரான கிரகங்களின் தசா புக்தியே அவருக்கு நடந்து கொண்டிருக்கும்.
மேலும் சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.