FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 27, 2012, 07:31:26 PM

Title: புத்திசாலித்தனம், வீரம், அன்பு ஆகியவை ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது ஏன்?
Post by: Global Angel on July 27, 2012, 07:31:26 PM

ஒரு கரு உருவாகும் போது அதில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ போன்ற அடிப்படை மூலக் கூறுகளை பெற்றோரின் மரப்புக்கூறில் இருந்து கருவுக்கு கடத்துவது 5ஆம் இடம் மற்றும் அதற்கு உரிய கிரகமாகும். எனவே, ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, கௌரவம், பாரம்பரியத்தை அந்த ஜாதகர் காப்பாற்றுபவராகவும், முன்னோர்களின் சொத்தை வைத்து முன்னுக்கு வருபவராகவும் இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதி நன்றாக இருந்தால் தனது முயற்சியால் வாழ்க்கையில் அவர் முன்னேறுவார். ஆனால் ஒருமுறை முயன்றால் இவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பலமுறை முயற்சிக்க வேண்டும்.

லக்னாதிபதி நன்றாக இருந்து (ஆட்சி, உச்சம் பெறுதல்), நீச்சம் பெறாமல் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அவருக்கு வீரம், விவேகம் ஒருசேர இருக்கும்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை சண்டை, சச்சரவுகளை உருவாக்கக் கூடியது 6ஆம் இடமாகும். ஒருவர் ஜாதகத்தில் 6க்கு உரியவன் பலவீனம்/மறைந்து இருந்தால், அவர் சண்டை, சச்சரவில் ஈடுபட மாட்டார்.

ஆறுக்கு உரியவர் 6இல் (வலுவாக) இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவார். நேரடியாக சண்டையில் இறங்காவிட்டாலும், மற்றவர்களை தூண்டிவிட்டு கலகம் ஏற்படுத்துவர். கடன் தொல்லையும் ஏற்படும்.