FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 27, 2012, 07:21:11 PM
-
மனிதர்கள் பலர் கடின உழைப்பால் முன்னேறுகின்றனர். ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்கும் சிலர், வசதி வாய்ப்புடன் கூடிய நல்ல நிலைக்கு வந்ததும், மது, மாது (பிற பெண்கள் தொடர்பு) இவற்றை நாடுகிறார். அதுதவறு என்று அவர்களுக்குத் தோன்றினாலும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடியது வேறு இல்லை என மனதில் நினைத்துக் கொள்கின்றனர்.
எனவே, ஒரு மனிதன் தனது வாழ்வில் மது, மாது ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்க முடியுமா?
பதில்: மது, மாது ஆகிய இரண்டில் மட்டுமே இன்பம் என உலகில் உள்ள 100% மனிதர்களும் கருதுவதில்லை. ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது, 4ஆம் இடமான சுகஸ்தானமே ஒருவரின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 12ஆம் இடம் ஒருவரின் மறைமுக இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
எனவே, 4 மற்றும் 12ஆம் இடங்களைப் பொறுத்தே ஒரு மனிதனுக்கு எந்த விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதைக் கூற முடியும். எனக்கு தெரிந்த ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து இன்று லட்சாபதிபதி நிலைக்கு உயர்ந்துள்ளார். எனினும், கோயிலில் சிதறு தேங்காய் உடைதால் அதனை சேகரித்துச் சாப்பிடாமல் அங்கிருந்து நகர மாட்டார். அவருக்கு அதில் தான் பேரானந்தம் அடங்கியிருக்கிறது.
இதேபோல் மற்றொரு முக்கிய பிரமுகரும் தனது கடந்த கால வாழ்க்கையில் மேற்கொண்ட ஒரு விஷயத்தை தகுதி, தராதரம் பார்க்காமல் இன்றும் செய்து வருகிறார். ஏழ்மை நிலையில் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட அவர், இன்று பல தொழில்களுக்கு அதிபரான பின்னரும் காரில் சென்று சாலையோரக் கடைகளில் உணவு அருந்துகிறார். அவருக்கு அதில்தான் இன்பம், சந்தோஷம், மகிழ்ச்சி.
எனவே, ஒருவரின் ஜாதகத்தில் சுகாதிபதி எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி, இன்பம் அமையும்.