FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on July 27, 2012, 06:35:03 PM
-
ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.
ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.
இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போன்று அருந்தும் போதும் எல்லா நோய்களும் நீங்கிவிடும். அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள். அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.