FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 27, 2012, 05:50:21 PM
-
அன்பே
அணு அணுவாய்
உன்னை நேசித்தவள் நான்
அனுதினம் உன்னை பூஜித்தவள்
அடங்காத ஆசைகளை ஜாசித்தவள்..
இன்று அடுத்து என்னவென்று
தெரியாத ஏக்கம் என்னுள்
இனம் புரியாத தவிப்புகள் உள்ளுள்
என் இதயத்து ஆசை எல்லாம்
ஒரு தடவையாவது
உன் மடி சாய்ந்து
என் மரணத்தை நேசிப்பதுதான் ...