FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 27, 2012, 05:13:16 PM

Title: உணர்வுகள்
Post by: Global Angel on July 27, 2012, 05:13:16 PM
ஏன் ...?
எதுவும் புரியவில்லை ..
உனக்காக சுவாசித்தேன்
உன்னையே நேசித்தேன்
இருந்தும் ..
என் மீது ஏன் வெறுப்பு கொள்கிறாய் ...
என் இரவுகள் விடிவதில்லை
உன் உறவுகள் தொடராத போது..
என் உணர்வுகள்
உணர்வதே இல்லை
உன் உதடுகள் தீண்டாத போது ...
என் கனவுக்கு அழைப்பு விடுத்தவனே
காலனுக்கும் அழைப்பு விடு
உன் காதலி துயில் கொள்ள ...