என்னவளுக்காக பகலில் நீ வெளிச்சம் தரும்
சூரியனே உன் நல்ல உள்ளத்திற்கு எனது நன்றி !
என்னவளின் முகம் அழகை போல் இருக்கும்
நிலவே உன் அழகிய வடிவத்திற்கு எனது நன்றி !
என்னவளின் இதழ்களை போல மென்மையான
ரோஜா பூவே உன்னக்கு எனது நன்றி !
என்னவளின் இதழ்களின் சுவையை கொண்ட
செரிபழமே உனக்கு எனது நன்றி !
என்னவளின் எச்சில் சுவையை கொண்ட
தேனே உனக்கு எனது நன்றி !
என்னவளின் முத்து போன்ற பற்களை கொண்ட
கடல் முத்துதே உன்னக்கு எனது நன்றி !
எனவளின் கழுத்து வளைவுகளை கொண்ட
சங்கே உனக்கு எனது நன்றி !
என்னவளின் உடல் வளைவுகளை போல
வளைந்து நெளிந்து செல்லும் அருவியே எனது நன்றி !
என்னவளின் ஆறடி குந்தல் போல கொண்ட
கார்மேகமே உனக்கு எனது நன்றி !
என்னவள் சுவாசிக்க மூச்சு காற்று தந்த
மரமே உனக்கு எனது நன்றி !
என்னவளின் உடலின் அழகை மறைக்க உதவிய
பருத்தி பூவே உனக்கு எனது நன்றி !
என்னவளின் மென்மையான காதலை சுமந்து
களைப்பு அடையாமல் இருக்கும் இதயமே நன்றி !
thana nalla eruku en ethuku ellam nanri solra nu than theriyala nadathu