என்னவன் !
என்னவன் நல்லதை கற்று கொடுத்து
எனக்கு ஆசான் ஆகிறான் !
என்னவன் என் தவறை திருத்தி
எனக்கு தந்தை ஆகிறான் !
என்னவன் கருவறையில் என்னை சுமந்து
எனக்கு தாய் ஆகிறான் !
என்னவன் என் சுகதுக்கங்கள் பகிர்ந்து
எனக்கு தோழனாகிறான்!
என்னவன் நல் மனதை கொடுத்து
எனக்கு அன்பனாகிறான்!
என்னவன் தன்னையே கொடுத்து
எனக்கு துணைவன் ஆகிறான் !
என்னவன் என் திறமை கண்டு
எனக்கு ரசிகன் ஆகிறான் !
என்னவன் குறும்பு பண்ணும் போது
எனக்கு மகன் ஆகிறான் !
என்னவன் என் பேரு காலத்தில்
எனக்கு தாதி ஆகிறான் !
என்னவன் என் வாழ்கைக்கு வழி காட்டி
எனக்கு பாது காவலன் ஆகிறான் !
pavima wow super da nalla elluthi irukinga remba santhosam ungal irandavathu kavithai vaalthugal aika aika thodarnthu elutha vaalthugal :-* ;D :-*