FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 24, 2012, 02:38:42 PM
-
குழந்தையாய்
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என
நினைவு தெரிந்த
நாள் முதலாய்
அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்
தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்
ஒருபோதும்
பொருந்தவேயில்லை
ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!