FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 24, 2012, 02:33:19 PM

Title: வலிக்கும் நியதி
Post by: Anu on July 24, 2012, 02:33:19 PM
வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து


உறவு
அடிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றின மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை




நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே




முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்
Title: Re: வலிக்கும் நியதி
Post by: Global Angel on July 24, 2012, 06:18:19 PM
Quote
வலி
பறித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து

nice one anuma
Title: Re: வலிக்கும் நியதி
Post by: Anu on July 26, 2012, 09:09:35 AM
Nandri Rose dear