அழகு செடிகள் வளர்பதினால் நம்ம வீட்டையும் நம் மனதையும் நந்தவனமாக்கும் !!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa7.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2Fs720x720%2F560864_261304847308356_763410088_n.jpg&hash=efa584bbc8bf9758d0c1ab3051f721f4f1207b61) (http://www.friendstamilchat.com)
சிலரின் வீட்டுட்குள் நுழையும் போதே பூக்களின் வாசம் வருபவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்...வீடுகளின் அழகை அதிகரித்துக் காட்டுபவை பசுமையான தாவரங்கள். நடை பாதை ஓரங்களிலும், காம்பவுண்ட் சுவர் ஓரங்களில் பெரும்பாலான எழிலூட்டும் பூக்களை உடைய மறைப்புச் செடிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சற்றே உயரமாக வளரும் செம்பருத்தி, லன்டோனா, மாதுளை போன்ற செடிகள் நம்நாட்டில் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பூக்கள் பல வண்ணங்களில் உள்ளதால் நிலையான பெருஞ் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.
வீடுகளுக்கு ஏற்ற அழகு செடிகள்
இத்தகைய செடிகள் பார்பதற்கு மலை போல காட்சியளித்தாலும் அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்ட தன்மை உடையவை. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.
உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரகூடியது.அனைவரின் வீடுகளிலும் இதனை விரும்பி வளர்ப்பவர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.ஓரடுக்கு, பல அடுக்கு என பூக்கள் பூக்கும். அழகான இதழ்களை உடையது.
மல்லிகை ,முல்லை, போன்ற தாவரங்கள் வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது. அழகோடு வாசனையும் தரக் கூடியது. உயரமாக வளரும் பவள மல்லிச் செடியானது கீழ்நோக்கி கிளைத்து பூக்கும் தன்மையுடையது. பூக்கள் இரவு நேரத்தில் விரிவடைந்து நறுமணத்தைப் பரப்பும்.
கோழிகொண்டை,வாடாமல்லி,பந்திப்பூ போன்றவை அதற்கேற்ற மாதங்களில் பூத்து வீட்டை அழகூட்டக் கூடியது..மாலை பொழுதில் பூக்கும் அஞ்சுமணி மாலையையே தன் வருகையாக கொண்டுள்ளது..
செவந்தி, துளசி, நந்திவெட்டா போன்றவை வீட்டை அழங்கரிக்க கூடியவைகளில் ஒன்று.நித்திய கல்யாணி செடி அதிகம் கிளைத்து வருடந்தோறும் வெள்ளை சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு பொதுவான தாவரம்.
சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை.
வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிறப்பு, வெள்ளை நிறங்களில் பூக்கும், தண்டு மூலம் பயிர்பெருக்கும். அதிக முட்கள் உள்ள லன்டானா செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.
அகாலிபா எனப்படுவது அழகிய இலை அலங்காரச் செடி ஆகும். இந்தப் பூக்கள் மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ வளரும் தன்மையுடையது.பென்டாஸ் எனப்படுவது ஒரு நீண்ட கால அலங்காரச் செடி ஆகும்.வெள்ளை சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும்.
காகிதப்பூ தாவரம் உயரமாக வளரும் ஒரு கொடி வகைத் தாவரம், முள் உள்ள இக்கொடிகள் நட்சத்திர வடிவ பூக்களை உடையது. வறட்சியை தாங்கி வளரும்.
டிசம்பர் கனகாம்பரம் அதிக உயரம் வளராத பெருஞ்செடி, மஞ்சள், வயலட் நிறத்தில் பூக்கள் பூக்கள் பூக்கும். பெரும்பாலும் பனிக்காலத்தில் பூத்துக் குலுங்கும்.
குரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது. பவுட்டர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.
உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகை. ஊதா நிற பூக்களையும், மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இலை அழகு கண்ணைக் கவரும். முள்ளுடைய செடி உடையதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டியிருக்கும். கிராப்டோபில்லம் எனப்படும் இலை அழகுச் செடியான தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது.
இந்தச் செடிகளை மண்ணின் தன்மைக் கேற்ப வளர்த்தால் நம்முடைய வீடும் அழகான நந்தவனமாக மாறும்.