FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 19, 2012, 04:24:03 PM

Title: ~ காலிபிளவர்யில் உள்ள நன்மை !!! ~
Post by: MysteRy on July 19, 2012, 04:24:03 PM
காலிபிளவர்யில் உள்ள நன்மை !!!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa1.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F555641_268276156611225_1063161316_n.jpg&hash=ea57d4dd1234cb4daec5a59d2e1117fab55ceaf6) (http://www.friendstamilchat.com)(http://)

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.


இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.