FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on July 15, 2012, 08:00:13 PM
-
கர்பமான மனைவியை கவனமாக கையாள்வது எப்படி? கணவருக்கான ஆலோசனை
கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என் பதுதான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட் கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது கணவனின் அரு காமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை பெரும்பாலான பெண்கள் மருத்துவர்களிடம் கேட்கின்றனர்.
பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோ ன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந் தையின் படிப்படியான வளர்ச்சி போன்ற வை பெண்ணுக்குள் ஒருவித கிளர்ச்சி யை ஏற்படுத்தும். அதேபோல் பெண்மை யின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்படுத்தும் எனவே அந்த நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபட வே ண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந்தையின் நலனில்தான் அதிக அக்க றை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்குத்தான் முதலில் முக் கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக கலந்து பேசி உடல் ரீதி யாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டும். வயிற்றி ல் குழந்தை இருப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உற வில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
கர்ப்பகாலத்தில் மூன்று பருவ நிலைகளில் முதல், இறுதி நிலைகளில் உறவில் ஈடுபடுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி குறைவா ன அளவே இருக்கும். வாந்தி, தலைச் சுற்றல் போன்றவைகளினால் பெண்கள் அதிக சோர்வோடு காணப்படுவார்கள். எனவே அப்பொழுது உறவில் ஈடுபடுவ து பாதுகாப்பற்றது என்கின்றனர் மருத் துவர்கள்.
அதேபோல் மூன்றாவது பருவத்தில் பிரவசத்தை எதிர்நோக்கிக் கொண்டிரு க்கும் பெண்களுக்கு முதுகுவலி, கால்வலி போன்றவை ஏற்படும் அந்த சமயத்தில் உறவில் ஈடுபடுவதும் குழந்தைக்குப் பாதுகாப்பான தல்ல என்கின்றனர். நான்கு முதல் 7 மாதம் வரையில் பாதுகாப்பா ன முறையில் உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொஸிசன்க ளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். அன்பான அரவ ணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங்களில் கர்ப்பி ணிப்பெண்ணுக்குப் போது மானதாக இருக்கும் என்கின் றனர். எனவே சிரமம் தராத தொடுகையையும், கணவரி ன் அருகாமையையும் மட்டுமே எதிர்பார்க்கும் பெண்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதுமாதிரி நேரங்களில் மனைவியை கவனமா ய் கையாளவேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறு த்தியிருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் கர்ப்பிணி மனை வியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல் லது என்பது மருத்துவர்களின் அறிவுரை யாகும்.