FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: Global Angel on July 15, 2012, 07:48:04 PM

Title: தாம்பத்திய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்க‍ . . .
Post by: Global Angel on July 15, 2012, 07:48:04 PM
தாம்பத்திய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்க‍ . . .

 


காதலர்கள் மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுவார்கள். அதே சமயம் திருமணம் ஆன தம்பதியர் அதுபோல பேசுவார்க ள் என்று கூற முடியாது. திருமண ம் ஆன மறுநாள் தொடங்கியே அவர்களுக்கு குடும்ப பொறுப்புக ள் வந்து விடும். இருவரும் பேசிக் கொள்வதற்கு தனியாக சில மணிநேரங்களைக்கூட ஒதுக்க முடியாத அளவிற்கு சுமைகள் கூடி விடும். எனவே தம்பதியர் தங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி பேசுங்கள். அப்பொழுதுதான் தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
 
கூச்சத்தை விடுங்கள்
 
காதல் வாழ்க்கையில் கூச்சம்தா ன் முதல் எதிரி எனவே இருவரு மே கூச்சத்தை கைவிடுங்கள். தயக்கமில்லாமல் காதல் பாஷை களை பரிமாறிக்கொள்ளுங்கள். இந்த பேச்சு தான் உங்கள் காதல் உணர்வுகளின் கிளர்ச்சியை அதிக ரிக்கும்.

காதலை வெளிப்படுத்துங்கள்
 
எந்த ஒரு விசயத்தையுமே வெளிப்படுத்தினால்தான் தெரியும். செக் ஸ் விசயத்தில் உங்கள் தேவை என்னவோ அதை தெளிவாக தெரிவி யுங்கள். அப்பொழுதுதான் இரு வராலும் திருப்தியாக செயல்பட முடியும்.
 
துணையை புகழுங்கள்
 
புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. உங்கள் வாழ் க்கைத் துணை உட்பட. எனவே உங்கள் துணையை நன்றாக ரசித்து புகழு ங்கள் வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவக்கும். உங்கள் மீதான காதல் உணர்வுகளும் அதிக ரிக்கும்.
 
புதிய யுக்திகளை கையாளுங்கள்
 
ரொமான்ஸ் என்றாலே தினம் தினம் புதி தாய் இருந்தால் உற்சாகம் பற்றிக்கொள் ளும். புதிதாக, கிரியேட்டிவாக நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் துணையை மகிழ்விக்கும். தினந்தோறும் ஒரே மாதிரி யாக இருப்பது போராடித்து விடும் அல்ல வா? எனவே தாம்பத்ய உறவின்போது புதிய யுக்தியை கையாளுங்கள். அப்பொழுதுதான் தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும்