FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Global Angel on August 05, 2011, 02:11:18 AM

Title: ரெடிமேட் இட்லி
Post by: Global Angel on August 05, 2011, 02:11:18 AM
ரெடிமேட் இட்லி



தேவையான பொருட்கள்:

    * புழுங்கலரிசி
    * உளுந்தம்பருப்பு
    * வெந்தயம்
    * உப்பு

செய்முறை:

    * புழுங்கலரிசியை சற்று ஊற வைத்து, நன்றாக களைந்து, கல்லை அரித்து, வடிய வைத்து, நிழலில் துணியை போட்டு உலர்த்தி வைத்து, நன்றாக மிஷினில் பொடி ரவை போல் உடைத்து வைத்து கொள்ளுங்கள்.
    * வேண்டும்போது, தேவையான அளவு மாவை, தண்ணீர் விட்டு பிசைந்து இரண்டு பங்கு மாவுக்கு ஒரு பங்கு உளுத்தம்பருப்பையும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் போட்டு, ஊறவைத்து களைந்து, கொட கொட என்று அரைத்து போட்டு, அதற்கு தகுந்த உப்பையும் போட்டு கரைத்து வைத்து மறுநாள் வார்க்கலாம்.

நன்றி தினமலர்! smile.gif

கருத்துத் தெரிவிக்கவும்
இட்லி மற்றும் தோசை – 2 in 1

செப்டம்பர் 23, 2008 இல் 8:59 மு.பகல் (சமையல் குறிப்புகள்)
Tags: இட்லி

இட்லி எல்லோருக்கும் செய்ய தெரியும். ஆனால் இந்த முறையில் எளிதாக செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள் :-

இட்லி அரிசி – கால்படி உலக்கு (2) அறைக்கா படி உலக்கு (2)

உளுந்து – வீசம்படி உலக்கு (2)

துவரம் பருப்பு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

    * முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி ஊறவிடவும். வேற பாத்திரத்தில் உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை கழுவி ஊற விடவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊறினால் எளிதில் அரைக்கும்.
    * க்ரைண்டரில் உளுந்து போட்டு தேவையான தண்ணீர் விட்டு 1/2மணி நேரம் அரைக்கவும். பின்பு அதனுடன் அரிசியையும் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
    * நன்கு அரைத்ததும் க்ரைண்டர் ஓடும் போதே உப்பையும் சேர்த்து 5 நிமிடம் ஒட விடவும். (கையை பிசைவதற்கு பதிலாக)
    * பின்பு க்ரைண்டரை அமத்தி அரைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி வைத்து மூடி வைக்கவும். குறைந்தது 7மணி நேரம் இருந்தால் தான் இட்லி நன்றாக இருக்கும்.
    * அப்புறம் என்ன காலையில் இட்லி குக்கரில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து தேவையான சட்னியை செய்து சாப்பிடுங்கள்.
    * தோசை வேண்டுமா இட்லி மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசைக்கல்லில் தோசை ஊற்றுங்கள். அவ்வளவு மிருதுவாகவும் மொறுமொறுப்பாகவும் வரும்
.