FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 13, 2012, 10:41:20 PM

Title: - உருக்கம் -
Post by: aasaiajiith on July 13, 2012, 10:41:20 PM

ஊருக்கு  ஒளிகொடுக்க
தன்னை தீயிட்டுக்கொண்ட மெழுகுவர்த்தி
 
ஆதவன் அவன் தன் அனல்தகிக்கும்
ஆதங்க பார்வைப்பட்ட பனிப்பாறை 

அடியில் அக்கினி தீமூட்டி பின்
பயன்பாட்டிற்க்கு எடுக்கப்படும்  தார்

தொழிற்ச்சாலையினில் புதியதாய்
பரிணாம பிறப்பெடுக்கும்  இரும்பு

இவை அனைத்தும்  அச்சச்சோ என
பரிதாபத்துடனும் ,ஏக்கத்துடனும்  பார்கின்றது

அனுதினமும் அழகான   உன் நினைவால்
அணுவணுவாய் உருகிடும்

இந்த அப்பாவி ஆசையின்  மனதை  கண்டு ...

   - உருக்கம் -