FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 13, 2012, 02:36:57 PM
-
பேசும் மௌனம்
விடிந்தது கல்யாண வீடு
அடுக்கும் நாற்காலிகளில்
கனமாய் உட்கார்ந்திருந்தது
பேசித்தீர்த்த கேலியும், கிண்டலும்
காயும் நிழல்
கொதிக்கும் வெயிலில்
குதித்தோடும் குழந்தைகள்
சீண்டப்படாத மரத்தின் கண்ணீர்
தேங்கிக் கிடக்கிறது நிழலாய்.....
முரண்
பசித்தவன் வாரிக்கொள்கிறான்
மிஞ்சியவன் வீசிய சோற்றை
காலியாகிறது குப்பைத் தொட்டி
குப்பையாகிறது சமத்துவம்
எச்சில் வாசம்
பிதுங்கி வழியும் பேருந்தில்
மடிமேல் இருத்தி பின் பறித்துச்சென்ற
மழலை வழியவிட்ட எச்சில்
பயணிக்கிறது காயாமலே