FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 13, 2012, 02:35:08 PM
-
பழுப்பேறிய
வெள்ளை வேட்டி
சாயம் போன
கசங்கிய சட்டை
தடித்த முண்டாசு
நரைத்த முள்தாடி
பளபளக்கும்
நகரத்து சந்திப்புகளில்
தட்டுத் தடுமாறும்
கிராமத்தானை
”சாவு கிராக்கி”
என கடக்கும்
நகத்தில் அழுக்குச்சேரா
நகரத்தானின்
அடுத்த வேளை
சோற்றிலாவது
அந்தச் சாவுகிராக்கி
சிந்திய வியர்வையின்
உப்பு கொஞ்சம்
கரிக்கட்டும்!