FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 13, 2012, 02:31:39 PM
-
விடிய விடிய சேகரித்துப்
பாதுகாத்த கனவுப் பெட்டகம்
விடிந்ததும் காலியாக
*****
வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே
*****
எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு