FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 12, 2012, 11:54:35 PM

Title: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: Global Angel on July 12, 2012, 11:54:35 PM
நண்பர்கள் கவனத்திற்கு ... நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் கற்பனை குதிரைகளை முடக்கிவிட்டு கவிதை மலைகளை பொழியலாம் ... கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் 17 ம் திகதிக்கு முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..  
Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: ஸ்ருதி on July 16, 2012, 09:09:13 AM

கண்ணுக்கு குளிர்ச்சியாய்
மனதுக்கு மகிழ்ச்சியாய்
அழகாய் அமைதியாய்
ஒரு வெற்றி
வாழ்த்துகிறேன்... ;) ;)

நட்பையும் பாசத்தையும்
அளவில்லாமல் பகிர்ந்து
இதயங்களை பறக்கவிட்டோம்
எங்களுக்குள் காதல் இல்லை
நட்பை மட்டுமே நேசிக்கும்
காதலர்கள் நாங்கள்....

நட்புறவுகளுக்கு
புது பெயர்கள்
இட்டு மகிழ்கிறோம்..
உறவுகள் புனிதமானது
களங்கம் இல்லை..


பார்த்து காதல்
பார்க்காமல் காதல்
பணம் இருந்தால் சொந்தங்கள்
வாழ்கையின் நியதியாய் போனவை..
பார்த்தும் பாராமலும்
உறவு கொள்ள
நட்பை தவிர சாத்தியம்
எதிலும் இல்லை..
நட்புக்காக ஒரு வலைத்தளம்..
எங்கள் FTC..

சொல் எனும் மலரெடுத்து
அன்பு எனும் நூலால்
அழகாய் தொடுத்து
சூட்டுகிறேன்
உனக்கு கவி எனும் பூமாலை..!!

வாழ்த்த மொழி தெரியவில்லை
வாழ்த்துவதற்கு
வார்த்தையும் இல்லை

குறுகிய காலத்தில்
சிகரம் தொட்ட
இதயத்து சூரியனே ;) ;)
வானில் உலாவந்து
அசத்தலான நிகழ்சிகளை
அள்ளித்தரும் FTC FM ...
மேன்மேலும் பல வளர்ச்சிகள் அடைய
எந்தன் வாழ்த்துக்கள் உந்தனுக்கு...

உன் வளர்ச்சியில்
உறுதுணையாய் இருக்க
இறைவனிடம் பிராதித்தவளாய்
என்றும் அன்புடன்
ஸ்ருதி


Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: Dong லீ on July 17, 2012, 01:13:19 AM
நம்மை இணைக்க ஓர் தளம்
நண்பர்கள் இதயங்களை இணைக்கும்
நண்பர்கள் இணையதளம்
அதன் அடித்தளம் அமைக்கபெற்று
இன்றுடன் ஓராண்டு
சுயநலவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று
இன்றுடன் ஓராண்டு

முகம் தெரியா மனிதர்களாய்
எங்கெங்கிருந்தோ வந்த நாம்
நண்பர்களாக
அண்ணன் அக்கா தம்பி தங்கை
மச்சான் என பற்பல உறவுகளாக
உயிரினும் மேலாய்
ஓர் குடும்பமாய் உருவெடுத்து
இன்றுடன் ஓராண்டு

ஆண்டுகள் நூறாகினும்
நம் உறவுகள் தொடரும்
உயிர்ப்புடன் ..

இது அன்பால் இயங்கும் சிறு உலகம்
அனைவர்க்கும் இரண்டாம் உலகம்

அன்பை ஊட்டும் வீடு
வாழ்கையை பயிற்றுவிக்கும் பள்ளி

அன்பு நட்பு கருணை பெருந்தன்மை
என பலவற்றை அறிந்து கொள்ளும் நாம்
சில நேரங்களில் துரோகங்களையும் சந்திக்க
நேரிடுகிறது

எழுத்துக்கள் வெறும் போலியான விஷயம்
அது  நம் உண்மையான அன்பை
எடுத்துரைக்காது என்று எண்ணுபவர்களுக்கு
நம் உணர்சிகரமான உறவு
சவுக்கடியாய் திகழட்டும்

விண்ணில் நம் வெற்றிக்கொடியை நாட்டி
கதிரவனை கூட குனிந்து பார்க்கும்
உயரம் தொட்டு விட்டோம்
பலரின் அயராத உழைப்பில் ...

நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த சில காளான்கள்
விண்ணை அடைந்த நம்மிடம்
போட்டியும் பொறாமையும் கொள்வது வேடிக்கை
வெற்றியை கொண்டாடி
அவர்கள் பொறாமையில் பொங்கல் வைப்போம்

புலியை பார்த்து சூடு போட்ட பூனைக்கு
புலியின் பாய்ச்சலை  உணர்த்த
இன்று உறுதி எடுப்போம்

உண்மையான வெற்றியையும்
உன்னதமான அன்பையும்
சுவாசிக்கும் நாம்
ஒருவருக்கொருவர் உறுதுணையாக
தோளோடு தோள் கொடுத்து
மேலும் பல வெற்றிகளையும்
நேசங்களையும் பெற்றிடுவோம்

மென்மேலும் வெற்றிகளை முத்தமிட நாம் இன்னும்
 
தீயா வேலை செய்யணும் பாஸ்
Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: Global Angel on July 17, 2012, 03:19:42 AM
இன்றோடு ஓராண்டு -எம்
இதயங்களிலோ நூறாண்டு ..
கடந்து போன காலம்
எனும் சக்கரத்தில்
கவிழ்ந்தும் தவழ்ந்தும்
நாம் எழுந்தது வரலாறு ...


சுயநலமிகளாய் வாழ தெரியாது
பிறர் நலத்தையும் வாழ
வாழ்த்த எழுந்ததுதான்
நம் நண்பர்கள் இணையத்தளம் ..
இதன் விதைகளில் விஷம் இல்லை
ஆனால் இதன் விருட்சங்கள்
துண்டாட படுகின்றது ...
வல்லூறுகளாய்
வட்டமிடும் கழுகுகள்
எந்நேரத்திலும் புதிதாய் பிறந்த
நம் இணையம் என்னும் கோழி குஞ்சை
இரை ஆக்க வட்டமிட்டவண்ணம் ...


வல்லூறுகளையே
வா என்று அறை கூவல் விடும்
கோழி குஞ்சுகள்தான்
நம்பிக்கை எனும் கயிறு  கொண்டு
ஒற்றுமை எனும் பின்னல்களால்
பின்னபட்ட நண்பர்கள் வலைத்தளம்
வல்லூறுகள் என்ன
வில்லு நூறுகள் கொண்டு தாக்கினாலும்
தன் வளர்ச்சி பாதையில்
வீறு நடை போடும் ...


பெயருகேன்று  பொது மன்றம் இல்லாது
பொருளுக்கென்றே மிளிர்கிறது மின்னல் என
கண்கவரும் படங்கள்
கருத்தை கவரும் பல பகுதிகள்
சிந்தனையில் சிறை பிடிக்கும் சில பகுதிகள்
சில்மிசங்களாய் சிலிர்க்க வைக்கும்
சில பகுதிகள்
அறிவியல் ஆன்மிகம் என
அனைத்தையும் தனகத்தே கொண்டு
தளிர் நடை போடும் செல்ல குழந்தை அவள்
அவளை தாலாட்டி பாராட்டி சீராட்டும்
அணைத்து நண்பர்களுக்கும் என்
நன்றி கலந்த பாராட்டுக்கள் ..


தினம் தினம் தேன் வந்து பாயும் கானங்கள்
திகட்டாத முத்து சாரல்கள்
புதிது புதிதாய் புதுமையான நிகழ்சிகள்
தனகத்தே கொண்டு
தரணியையே மயக்கும்
நண்பர்கள் இணையதள வானொலி ...


நண்பர்களுக்காய்
நண்பர்களாலேயே
நல்வழிப் படுத்தப்படும்
நல் இணையமே நண்பர்கள் உபயமே
என் கால் தடங்கள் அழிந்து போயினும்
உன் நினைவு தடங்கள் என் நெஞ்சில் உலாவரும்
ஓராண்டு அல்ல ஒரு நூறாண்டு கண்டு
உன்னதமாய் நடை போட
வாழ்க நீ .. வாழ்க வாழ்க வாழியவே ..
Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: vimal on July 17, 2012, 04:15:19 AM
மண்ணிலே மலர்ந்த நாள்
வானிலே வசந்த நாள்
என் உள்ளத்தில் ஊர்ந்த நாள்
என் உயிரிலே கலந்த நாள்
எனகோர் இனிய நாள்
அதுவே நண்பர்கள் இணையதள பிறந்த நாள்!!!

பிறந்து ஒரு வருடமே ஆனாலும்
ஓராயிரம் யுகத்தை தாண்டி விட்டாய்!
நண்பர்கள் இணையதளம், அது நம்
இதயத்தை இணைத்த தளம்,
மலைகள்,கடல்கள்,காடுகள் பல
தாண்டி இருந்தாலும் கலப்படமாகின்றோம்
கபடம் என்ற வார்த்தைக்கு அர்த்தமரியாமல்
நெஞ்சில் நிறைந்த குறைவில்லா அன்புடன்!!!

அன்பை பகிர ஆண்டவன் ஆயிரம்
உறவை படைத்தாலும், நட்பே
சிறந்த உறவு, அந்த உறவின்
உறைவிடமாய் உலா வருகிறது
நம் நண்பர்கள் இணையத்தளம்,
பல உள்ளங்களை அன்பால்
உருக்கிய தளம், நட்பின்
உன்னதமான தளமாய் தாளம்
போடுகிறது ஓராண்டுடனும்
நிறைவு பெற ஓட்டத்துடனும்!!!

நாம் முகம் காணமல் இருந்தாலும்
நம் சிந்தனைகளையும் , நம்
சிரிப்பின் சிதறல்களையும்
முன் வைக்கும் தளம்,
நாம் ஒரே குடும்பம் என்ற
உணர்வை உள்ளத்துள்
உருவாக்கிய தளம், இன்று
உயர்வான இடத்தை பிடித்து
விட்டது நம் இதயக்கூட்டில்!!!

அழகான பெயர்கள் பல இருந்தாலும்
சுரண்டரொட்டி , cuty, பிரியாணி ,
தவாலு, மைக்பேய், கண்ணு ,மொக்கைசிவா,
டவுட்தமிழ் , குட்டி-புட்டி , மழைமங்கினி,
சுவீட்டுபேக்கு , சூரியமாலா, அணிலு,
டொங்கு, குங்கமப்பூமாஸ்டர்......
அன்பான புனைப்பெயரால், ஆரவாரமாய்
நம் அன்பை அளவில்லாமல் செலவிட
நட்பின் களமாக நண்பர்கள் இணையதளம்
அடுத்த ஆண்டிற்கு ஜனனமாகிறது அதை நாம்
அன்புடனும், ஆவலுடனும், வண்ண மலர் தூவி
வரவேர்ப்போம(டி)டா!!! ;) ;) ;) ;D ;D ;D ;D
 

Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: Thavi on July 17, 2012, 09:37:06 AM
நட்புகு இலக்கணம்
நண்பர்கள் இணையத்தளம்
நண்பர்கள் கிடைப்பது
மிகவும் கடினம் -ஆனால்
நிமிடத்திற்கு பல நண்பர்கள்
கிடைக்க உதவியது நமது
நண்பர்கள் இணையதளம் ..

வாழ்விடம் வெவ்வேறு இருந்தாலும் ,
உண்ணும் உணவு வெவ்வேறு இருந்தாலும் ,
உடுத்தும் உடை வெவ்வேறு இருந்தாலும் ,


ஏழை,பணக்காரன் என்று பார்காமல்
பாசத்தையும் ,உண்மையான நட்பு -என்னும்
பாலத்தால் இணைப்பது நமது
நண்பர்கள் இணையத்தளம் ,

உன் புகழை சொல்ல வார்த்தை இல்லை
எங்கள் புன்னகைக்கு இளவரசன் நீ
உன்னிடம் உள்ள உயர்ந்த உள்ளம்
தன்னை அளித்துக்கொண்டு தர்மம் செய்கிறாய்
தங்கள் அறிவுகன்களை திறக்கசெய்தாய்
இசை மழையால் நனைய வைகிறாய்

நண்பனாய் நல்ல விசயங்களை செய்கிறாய்
எங்கள் பிறந்தநாளை உன் வாழ்த்துகளால்
வானத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறாய்


பார்க்க விட்டாலும் பகிர நினைத்த 
விசயங்களை பக்குவமாய் பட்டியலிட்டு
பரந்த கடலை போல காட்டினையே
நீயே எங்கள் மன அமைதியின் தாயே

நண்பர்கள் இணையத்தளம் அது பலர்
இதயத்தில் இணைந்த  தளமாய் 
இவ்வோராண்டு மட்டுமல்ல ஓராயிரமாண்டு
ஓலைச்சுவடியில் எழுதபடாத 
காவியமாய் என்றும் வளம் வர
வாழ்த்துகிறேன் !!!
Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: பவித்ரா on July 17, 2012, 09:38:30 AM









!!என் முதல் கவிதை உன் பிறந்தநாள் பரிசு!!



 
நண்பனுக்காக நண்பர்களே

சேர்ந்து உறுவாக்கிய

பிறப்பு உன்னுடையது ..
 
நீ பிறந்த கதை கேட்டு

மெய் சிலிர்த்து போனேன்...




மற்றவர்களை போல
 
இல்லையடா நீ!

சாதிக்க பிறந்தவன்

உன்னிடம் உரிமையாய்

எவ்வளவு எதிர் பார்ப்புக்கள்..
 



உன்னிடம் நட்பு நாடி வந்தேன்...

நல்ல நட்பினை தந்தாய்

பல உறவுகைளை தந்தாய்
 
களிமண்ணையும் பிள்ளையார்

ஆக்க தெரிந்தவன் நீ...




உன்னிடம் கற்று கொள்ள
 
நிறைய தகவல் இருக்குடா...

வருபவருக்கு வாரி கொடுக்கும்

அட்சய பாத்திரம் நீ...


 

இன்று உன் முதல் பிறந்த நாள்-காணும்

நாங்கள் மட்டற்ற மழிச்சியில் உள்ளோம்

காலங்கள் மாறும் பொது
 
உன் வளர்ச்சி உச்சத்தை தொடும்

உன்னை உருவாகியவனுக்கு

அன்று தான் பெருமை... .


 

நீ சந்தோஷமாய் வாழ்வதையும்

உன் வளர்ச்சியும்  கண்டு

மெய் சிலிர்த்து போகிறேன் ..
 
நான் உன் நட்பு பவி ..
Title: Re: FTC முதலாம் ஆண்டு நிறைவு கவிதைகள்
Post by: aasaiajiith on July 17, 2012, 08:33:25 PM
"FTC யின்  முதலாம் ஆண்டு நிறைவு விழா கவிதைகள்"

அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிசய அறிவிப்பு இது
அதன் சாரம் அப்பழுக்கற்ற  உண்மை என்பதனால்
அதிர்ச்சியின் அதிர்வலைகள், அடங்கிட அவகாசம் ஆனது
அத்தனை எளிதில் எதிலும் லயிக்காத என் மனமே
அழுந்திட  ஆழமாய் பதிந்துள்ளது எனும்போது
அதன்  அற்புதமும் ,அழகையும், ஆனந்தத்தையும்
அளவிட்டு அறிவிப்பது அவசியமற்றதே   !

அரட்டையறைக்கு அவ்வளவாய் அறிமுகமற்றவன்
அதனால்,அதைப்பற்றி அளவளாவவில்லை
அறிமுகமான அன்றிலிருந்து, இதோ இன்றுவரை
அரும்மன்றம் அதில்  அமர்ந்திருக்க தவறியதில்லை என்றும்

அழகான இந்த  முதலாமாண்டு  முடிவே ,
அளவிற்க்கெல்லாம் அப்பாற்பட்டு, பல்லாண்டுகாலம்
அற்புதமாய் தொடர்ந்திட, அகமலர்ந்த வாழ்த்துக்கள் !