FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 09, 2012, 11:21:05 PM
-
ன்னென்ன தேவை?
கெட்டியான தயிர் - 1 கப், பால் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, சுக்குத் தூள் - அரை டீஸ்பூன், குழைய வேக வைத்த பச்சரிசி சாதம் - தேவைக்கேற்ப.
தாளிக்க...
எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குழைய வேக வைத்த பச்சரிசி சாதத்துடன், உப்பு, பால், தயிர் சேர்த்து நன்கு பிசையவும். அத்துடன் பாதி அளவு சுக்குத் தூள் சேர்க்கவும். பிறகு கடுகு தாளித்து, மேலே மீதி சுக்குத் தூள் தூவிப் பரிமாறவும்.