FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: kanmani on July 09, 2012, 11:02:23 PM
-
திருமணப் பொருத்தம் :
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் திருமணங்கள் ஜோதிடத்தின் அடிப்படையில் திருமணப் பொருத்தங்கள் பார்த்தால், கண்டிப்பாக திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படும். திருமண பொருத்தங்கள் மொத்த 11 பொருத்தங்கள் அவைகள் தினம், கணம், மகேந்திரம், ஸ்தீரி தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரச்சு, நாடி, வேதை ஆகிய இவைகளின் செவ்வாய் தோஷமும் பார்க்க வேண்டும். எல்லோரும் செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று மட்டும் பார்க்கிறார்கள்? அது மட்டுமில்லை.
1. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு செவ்வாய் தோஷமுள்ள ஜாத கத்தை சேர்ப்பது போல் ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு+கேது தோஷ ஜாதகத்தை சேர்க்க வேண்டும்.
2. தினப் பொருத்தம் இல்லை என்றால் ராசி பொருத்தம் பார்க்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அந்த ஜாதகர்களை திருமணத்தில் சேர்க்க கூடாது.
3. நச்சு, நாடி, வேதை பொருத்தங்களை பார்ப்பது போல், யோனி, மகேந்திரம், வசியம் இந்த பொருத்தங்களையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஆயுள் மாத்திரம் போதும் என்று நினைக்க கூடாது.
4. யோனி பொருத்தம் தாம்பத்ய வாழ்வுக்கு கண்டிப்பாக வேண்டும். யோனி பொருத்தம் இல்லையென்றால் கணவன் & மனைவியாக 100 ஆண்டு காலம் வாழ்வதில் என்ன பயன்? வெறு நண்பர்களாகவே இருக்கலாமே?
5. மகேந்திரம் இல்லையென்றால் குழந்தையேது? கு£ந்தை இருந்தாலும் குழந்தைகளுக்கு தீமை தான் உண்டாகும். இதனால் மகேந்திரமும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஆனால் மகேந்திரம் இல்லாமல் இருந்து மணமகள், மணமகன் ஜாதகத்தில் குழந்தை பேறு நன்றாக இருந்தால் திருமண பொருத்தம் செய்யலாம்.
6. வசியம் இந்த பொருத்ததை கூட கண்டிப்பாக பார்க்க வேண்டும் வசியம் இல்லையென்றால், தினப் பொருத்தம், ராசிப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
7. ராசி பொருத்தம் என்பது இரண்டு ராசிகளுக்குள்ளும் பொருத்தம் இருக்கிறதா என்பதை மாத்திரம் பார்க்க வேண்டும் என்பது இல்லை, பெண் ராசிக்கு, ஆண் ராசிக்கு 6/8 ஆக வரக்கூடாது. 8/6 ஆக வரக்கூடாது. 2/12 ஆகவும் வரக்கூடாது. இந்த மாதிரி பொருத்தம் அமைந்தால் சில நாட்களில் சண்டையும், சச்சரவும் இருக்கும். அதனால் 6/8, 8/6, 2/12 ஆகிய ராசி பொருத்தங்களை தவிர்க்கவும். அவைகள் மகரம்/கும்பம், கும்பம்/மீனம், விருக்கம்/மேஷம், துலாம்/ரிஷபம், கும்பம்/கடகம் இது மாதிரி ஜோடிகளை திருமணத்தில் சேர்க்காமல் இருப்பது நன்மை தரும்.
8. ரச்சு பொருத்தம் என்பது கண்ட ரச்சு, கழுத்து, வயிறு, தொடை, பாதம் இதில் கண்ட ரச்சுவும், கழுத்து ரச்சுவும், விபரீதம், மற்றவைகளை மற்ற பொருத்தப் பார்த்து சேர்க்கலாம்.
9. நாடி பொருத்தம் ரச்சு இருந்து நாடி இல்லையென்றால் கூட திருமணம் செய்யலாம். மற்ற பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்யலாம்.
10. வேதை பொருத்தம் இல்லையென்றால் கண்டிப்பாக திருமணம் செய்யக் கூடாது. இந்த பொருத்தம் இல்லையென்றால் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் எதிரியாக நினைத்து சண்டையிடுவார்கள்.