FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 07, 2012, 06:19:29 PM

Title: - அருவி -
Post by: aasaiajiith on July 07, 2012, 06:19:29 PM
மலைமகள்  தன் மடிதவழவேண்டியவள்
மண்ணிலா என மனம் கசிந்து  வடித்திடும்
கண்ணீர் குவியல்கள்

 - அருவி -

உன்னோடு ஒப்பிடப்படவேண்டி மலைமகள்
கனகாலமாய் எடுத்துக்கொண்டிருக்கும்
குளியலின் சிதறல்கள்

 - அருவி -

குளித்து  முடித்ததும் கொண்டை அவிழ்த்து
வெயிலினில் உலர்ந்திட விட்டிருக்கும்
மலைமகளின் தண்ணீர் கூந்தலோ ??

 - அருவி -

வசீகரிக்கும் வரிகளால் உன்னை, வசம் வைத்திருக்கும்
எனக்கு போட்டியாய்,மலைமகள்
அனுப்பும் தண்ணீர் கவிதைகள் 

 - அருவி -
Title: Re: - அருவி -
Post by: ஸ்ருதி on July 08, 2012, 02:36:08 PM
கவிதை அருவி நன்று
Title: Re: - அருவி -
Post by: aasaiajiith on July 08, 2012, 06:19:41 PM
நன்றி ...