FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 05, 2012, 11:26:35 AM
-
சன்னா - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு
முந்திரி - 5
பாதாம் - 5
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இதை வதக்கவும்.
பச்சை வாசம் போனதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
தக்காளி வதங்கி எண்ணெய் பிரியும் போது தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
இதில் வேக வைத்த சன்னா மற்றும் தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து தூள் வாசம் போனதும் ஊற வைத்த முந்திரி, பாதாமை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து வந்ததும் எடுக்கவும். சுவையான சன்னா கிரேவி தயார். இது நெய் சாதம், ரொட்டி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் சூப்பர் ஜோடி.
note:
பாதாம் இல்லாமல் முந்திரி மட்டுமே அரைத்து சேர்த்தாலும் போதும். வெங்காயத்துடன் விரும்பினால் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம். காரம் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி கொள்ளவும். கொடுத்திருக்கும் அளவு குறைவான காரமே.