FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on July 04, 2012, 02:15:48 PM

Title: என்ன சொல்ல?
Post by: Anu on July 04, 2012, 02:15:48 PM
உடல் முறுக்கி உயிர் வலிக்க
எதையோ புரட்டுகையில்
பூக்கும் வியர்வைத்துளியில்
புரளும் காற்றின் சிலுசிலுப்பில்
சுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…
வெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்
மணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்
உயிர்ப்பதில்லை பலசமயம்

===========


அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின்  வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…
Title: Re: என்ன சொல்ல?
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:03:36 AM
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…


அருமை,  அழகான வரிகள்

பகிர்வுக்கு நன்றிகள்
Title: Re: என்ன சொல்ல?
Post by: Global Angel on July 06, 2012, 12:57:25 PM
Quote
அடர் வீச்சமாய் அடிக்கிறது
வெட்டப்பட்ட மரத்தின்  வாசம்
பூரித்து நீந்திய வேர்கள்
புழுங்கித் தவிக்கிறது
துளைத்துத் துளைத்து
சுவைத்த மண்ணுக்கும்
தேடித்தேடி உறிஞ்சிய நீருக்கும்
எழுத்துகளில்லா பதில்களோடு…


nice one anuma  ;)