FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on July 03, 2012, 07:54:02 PM

Title: - முகப்பருக்கள் -
Post by: aasaiajiith on July 03, 2012, 07:54:02 PM
முகம்பார்த்த மாத்திரமே  மனதோடு
முனுமுனுக்க துவங்கிவிட்டேன்
முத்து முத்தாய்  மலர்ந்திருக்கும் அந்த
 முகப்பருக்கள் மூன்றினை,  முறைத்தபடி
முத்தமிட கூடவும் முடியாத என்
முரட்டு இதழ்களுக்கு இல்லாத
முக்கியத்துவம், அதற்க்குமட்டுமா ??

 - முகப்பருக்கள் -
Title: Re: - முகப்பருக்கள் -
Post by: ஸ்ருதி on July 06, 2012, 07:23:12 AM
ஆஹா நல்லா இருக்கே ....
படிக்கையில் கொஞ்சம் சிரித்துவிட்டேன் தவிர்க்க முடியவில்லை :D


Title: Re: - முகப்பருக்கள் -
Post by: aasaiajiith on July 06, 2012, 10:15:05 AM
வாழை பழத்தோல்  வழுக்கி விழுந்த  வயதானவரை போன்ற
வலுவற்ற என் வரிகளுக்கும்  வாழ்த்துக்களா ????


பொன் ஓட்டமாய் பின்னூட்டம் வழங்கிய, ரீங்காரம் பாடும்
தேனீக்கள்  கூட்டத்தின் தலைவிக்கு
என் மனமார்ந்த நன்றிகள் !!!!