FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 02, 2011, 10:43:23 AM
-
வாக்கியத்தின் சாயல் காதல்
இளம் வாக்கியமான என்னை
ஏடுகளாக்கி பார்த்தார்கள்...
என்னை தொலைத்தேன்
இரு உள்ளங்கள் இணையும் பொழுது
பறந்து செல்ல துடித்தேன்
அவர்களின் மகிழ்ச்சியில்
ஆண்டுகள் கழிந்தாலும்
என் ஆயுள் கழியவில்லை
புது யுகங்கள் தோன்றினாலும்
என்றும் நான் மாறவில்லை...
உயிரை காணிக்கை ஆக்குகின்றனர்
நான் கேட்காமலே...
தவத்தை கலைக்கின்றனர்
சுருதி போடாமலே !!...
சொல்லறியா இருந்தவர்கள்
சொற்பொழிவு ஆற்றுகின்றனர்
பல மொழிகளை இணைக்கும்
நான். . . . . .
என்றும் பிரியமுடன் காதல்...!!!
-
nice kavithai... ;)
-
very nice kavidhai js..