மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெஸிபி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2012%2F05%2F16-chips-5-300.jpg&hash=efeaac8a0926d6005ed95c98c79b2886856bb411)
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று. இது ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ்!!. இதில் வாய்வு அதிகமாக இருப்பதால் பெரியவர்கள் அளவோடு சாப்பிடவும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
மிளகாய்த்தூள் - 1 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும். பின் அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி அதில் சீவிய உருளைக்கிழங்கைப் பொரித்து எடுக்கவும்.
பிறகு சிப்ஸ் மேல் அந்த கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி கலந்து வைக்கவும்.
இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!
குறிப்பு :
உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.