FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 01, 2012, 06:15:34 PM

Title: ~ சுவையான வாழைக்காய் வறுவல் ~
Post by: MysteRy on July 01, 2012, 06:15:34 PM
சுவையான வாழைக்காய் வறுவல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2012%2F07%2F01-banana-fry.jpg&hash=90acb0dcd4c8266d1d7bd533f3134441f1fb8be9)

வாழைக்காயில் பொறியல், பிட்டு, கூட்டு என சமைத்து சாப்பிடலாம். அமாவாசை நாட்களில் விரதம் இருப்பவர்கள் வாழைக்காய் சமைத்து முன்னோர்களுக்கு படைப்பார்கள். வாழைக்காயில் வறுவல் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வெரைட்டி ரைஸ்க்கு ஏற்ற சுவையான வறுவல் எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய வாழைக்காய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சோம்புத்தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுவல் செய்முறை

வாழைக்காயின் காம்புப்பகுதியையும், விளிம்புப்பகுதியையும் நறுக்கி தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.ரொம்ப மெல்லியதாக இல்லாமல் நடுத்தரமாக நறுக்கி கொள்ளவும்.அதனோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சோம்புத்தூள்,இஞ்சி பூண்டு விழுது, உப்பு,ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அகலமான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஊறவைத்த வாழைக்காய்களை வைத்து வேக விடவும். பின்னர் திருப்பி போட்டு லேசாக எண்ணெய் விட்டு வேக வைக்கவும். பின்னர் எண்ணெய் உறிஞ்சி கொள்ளும் பேப்பரில் அதை எடுத்து வைக்கவும். வாழைக்காய் வருவல் கிரிஸ்ப்பாக அளவான உப்பு காரத்தோடு சூப்பராக இருக்கும். இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.