FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 30, 2012, 11:11:15 AM
-
கடலையும் கடந்திடும் அளவிற்கு கண்களில்
கடுமையான கண்ணீர் துளி சிந்திட தயார்
போதாதெனில், உடலின் ஒட்டுமொத்த உதிரத்தையும்
ஒரு சொட்டும் மீதமின்றி கொட்டிட தயார்
பகரமாய் ஏதும் பெரிதாய் வேண்டாம் ..
அவள்தம் பட்டுமேனியில் சொட்டு சொட்டாய் பூக்கும்
வியர்வைதுளியாய் வைத்திடும் வரம் வேண்டும்!
வரம் தருவீரா ? பல கடவுள்களில் எவரேனும் ??
-வியர்வைத்துளி-
-
உடலின் ஒட்டுமொத்த உதிரத்தையும்
ஒரு சொட்டும் மீதமின்றி கொட்டிட தயார்
உதிரத்தை விட மகத்துவமா வியர்வை துளிக்கு ???
காதலின் ஆழத்தை ஆழமாய் சொல்லும் வரிகள்...