FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 02, 2011, 06:34:15 AM
-
துப்பாக்கி சத்தத்திற்கு மத்தியில்
மலரும் பூக்களில்..
இரத்த வாசம் அடிக்கிறது..!
வெண்கொடி ஏந்தி
வேடர்கள் வருகிறார்கள்..!
மறைந்து கொள்கிறார்கள்
மண்ணின் மைந்தர்கள்..!
மதங்களின் ஆட்சியே
எப்போதும் நடக்கிறது..!
மக்களாட்சி மட்டும்
மரணித்துக் கிடக்கிறது..!
ஜனநாயகத்தின் சவ ஊர்வலம்
நெடுநாளாய் நடக்கிறது..
தேசிய மயானம் தேடி..!
குருதிப் பாத்திகளில்
நட்டு வைத்த ரோஜா செடியோ
வெள்ளையாய் சிரிக்கிறது..!
கனிவளத்தால் மறைக்கப்படும்
கண்ணீர் நிலம்
காஷ்மீரம்..!!!
-
kuruthium keevalum saabam vanga pattavarkalin theerpu pola..... :(
-
தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை அபகரித்துகொள்ள நினைகிறார்கள் ஆட்சியாளர்கள் இதன் விளைவு தான் இந்த அப்பாவிகள் கொள்ளப்படுகிறார்கள்..!!!