FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on June 27, 2012, 06:25:02 AM

Title: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
Post by: ஸ்ருதி on June 27, 2012, 06:25:02 AM
ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருப்பது கடினம். இப்படி சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும். இந்த நட்புறவு கெடுவதற்கு, அவர்களிடம் தோன்றும் காதல் உணர்வு அல்லது காம உணர்வே பெரும்பாலும் காரணமாக அமையும். எப்போது ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்க்க பல காரணங்களுள் ஒரு சிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று படித்துப் பாருங்கள்!!!

* இருவருக்கும் உள்ள நட்புறவு மாறுவதற்கு முதற்காரணம் பாலினம். ஒரே பாலினத்தில் இருக்கும் நட்பானது கெடுவது சாத்தியமே இல்லை. ஆனால் வேறு வேறு பாலினத்தில் இருவருக்கு உண்டாகும் நட்பானது, இருவருக்கும் இடையில் உண்டாகும், அன்பால் ஏற்படும் ஈர்ப்பை நிறுத்த முடியாது. எப்படியோ, நட்பாக இருக்கும் இரு பாலினத்தவருக்கு உண்டாகும் நட்பானது, மனதில் நட்பையும் மீறி வேறு உலகத்திற்கு சென்றுவிடும்.

* ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் நட்புறவு பெரிதும் கெடுவதற்கு உடல் அளவில் உண்டாகும் அன்பும் காரணம். இத்தகைய எண்ணம் வந்த பின்னர் அவர்களால் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தி, அதனை மறந்து வாழ வேண்டும் என்று நினைத்தாலும், இருக்க முடியாது. அதிலும் அந்த எண்ணம் வந்துவிட்டால், அவர்கள் தனியாக இருந்தால் அந்த நட்புறவு போய்விடும்.

* நட்பாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், காதல் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டாலும் போய்விடும். இப்போது பெரும்பாலானோரில் நண்பர்களாக இருந்தவர்களே வாழ்க்கைத்துணை ஆகிறார்கள். ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதால், காதலானது தோன்றுகிறது.

* நண்பர்களாக இருப்பவர்கள் சில சமயம் விளையாடுவார்கள். அப்படி விளையாட்டுக்காக ‘காதல் செய்கிறேன்’ என்று சொல்லி விளையாண்டாலும், அந்த நட்புறவு கெடும். ஏனெனில் அப்போது அவர்களுக்கு மனதில் ஆசை ஏற்படும். பின் அதை மாற்ற நினைத்தாலும் முடியாது, மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும்.

* நண்பர்களாக இருப்பவர்கள் கண்டிபாக ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பர். ஆனால் அந்த பாசம் சில நாட்களில் அதிகமாகி, ஒருவர் மீது ஒருவர் ஒரு புரியாத அன்பாகத் தோன்றும். ஆனால் அவர்களில் ஒருவர் மற்றொருவரை, வேறு எவரோடும் நின்று பேசுவதை பார்த்தால் தாங்க முடியாது. இவ்வாறான உணர்வு வந்துவிட்டாலே அது நட்புறவு காதலாக மாறிவிடும்.

மேற்கூறிய இத்தகைய காரணங்களாலே, ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பது கடினம் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.
Title: Re: ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா…?
Post by: Dong லீ on June 27, 2012, 02:39:40 PM
நண்பர்களே வாழ்க்கை துணையா மாறினா நல்ல விஷயம் தான்
இந்த பதிவு சொல்றது போல வேற காரணங்களுக்கு வயதும் ஒரு காரணமா இருக்கலாம்