FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on June 23, 2012, 06:30:54 PM
-
நேரத்தை வீணாக்குவதில்லை
கடிகார முட்கள்
-
இன்று அதிகமாக குழந்தைகள் வர வேண்டுமென
வேண்டிக்கொண்டன கோவில் தெய்வங்கள்
-
ஒரு அதிசய கப்பல்
ஆயிரம் ஆயிரம் மக்களை காப்பாற்றுகிறது
டைட்டானிக் திரைப்படத்தை பின்னோக்கி பாருங்கள்
-
எல்லாரும் சிரிக்கும் போது ஒருவன் மட்டும் சிந்தித்தால்
அவன் காதலிப்பவன்
எல்லாரும் சிந்திக்கும் போது ஒருவன் மட்டும் சிரித்தால்
அவன் காதலித்தவன்
-
காந்தி நாட்டுக்காக
உழைத்தார்
நாம்
காந்தி நோட்டுக்காக உழைக்கிறோம்
-
சத்தமில்லாமல் தட்டி கேட்டது
தவறு செய்யும்போதெல்லாம்
"மனது"
-
விடிவதற்குள் வீழ்ந்து விடுவோம்
என தெரிந்தும்
எரியும் விளக்கோடு விளையாடும்
விட்டில் பூச்சிகள்
-
சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!
-
காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!
-
தலை நிமிர்ந்து பார்க்க கூட
வெட்க படும் நம்மூர் பெண்கள்
காதலை சொன்னால் மட்டும்
கன்னத்தை வருடுவது ஏன் (என்னா அடி)
-
அழகான இரவில்
கண்களை கொள்ளை இட வந்த
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
நிலவுடன் நட்சத்திரங்கள்
-
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால்
முதலில் உன் கண்களை மூடிக்கொள்
உதடுகளை விட அது தான்
அதிகம் பேசுகிறது
-
ஒரு பூகம்பம் வந்து சென்ற தடமும்
உன் சிறு புன்னகை தந்த உணர்வும்
ஒன்றாய் உள்ளத்தில்
-
Superb kavithaigal sri.
-
தோல்விகளின் வலியை விட
தோல்விகளை
ஒப்புக்கொள்வதன் வலியே
கொடூரமானது!
-
ஒவ்வொரு முறையும்
நீ அடைகாக்கும்
மௌனங்களைக் களவாட
கள்ளச்சாவிகளை தயாரிக்கிறேன்
கவிதைகளின் வாயிலாக!
-
எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!
-
நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்
-
அடிக்க கூடும் கைகளுக்கிடையே
வெறும் சப்தத்தை பிரசவித்துவிட்டு
தன் மரணத்தை தள்ளிப்போடுகிறது
பறக்கும் கொசு!
-
எங்கோ எதற்கோ யாரிடமோ
ஏதாவது ஒரு பொய்
உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
சிலநேரங்களில் நம்மிடமே நாமும்
-
’கடைசியா முகம்பாருங்க’
மயானத்தில் தீமூட்டும்முன்
எட்டிப்பார்க்கும் விழிகளில் படிவது
மரணத்தின் கொடூரமுகமே
-
பிறப்பு கல்வி காதல்
கல்யாணம் பணி தொழில்
உறுதியற்ற எதற்கும் நாள் குறிப்பவன்
ஒருபோதும் குறிக்கத்துணிவதில்லை
உறுதியான மரணத்தின் நாளை