FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 22, 2012, 02:21:35 PM

Title: அற்றவன்
Post by: Anu on June 22, 2012, 02:21:35 PM
வழிந்தோடும் இருளில்
பதட்டமின்றிப் பயணிக்கிறான்
பார்வையற்றவன்

~~

தோல்விப் பட்டியலில்
முதலிடம் பிடிக்கிறான்
நம்பிக்கையற்றவன்

~~

வயிற்றுக்குப் பசியை
தின்னக் கொடுக்கிறான்
காசற்றவன்

~~

மரணத்தில் இடுகாட்டில்
இடம் பிடிக்கிறான்
நிலமற்றவன்

~~

தேடலில்
புதைந்து போகிறான்
தேவையற்றவன்

~~
நேசிப்பை நேசிக்க
மறந்து போகிறான்
காதலற்றவன்

~~
பூக்களின் அழகை
வாசத்தால் ரசிக்கிறான்
பார்வையற்றவன்