FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 20, 2012, 02:30:51 PM

Title: நிழற்படம் தேக்கிய கணம்
Post by: Anu on June 20, 2012, 02:30:51 PM
அந்தந்தக் கணங்களை
தேக்கிவைத்த நிழற்படங்கள்
படிந்த கோப்பினை
விரல்கள் புரட்டிக்கொண்டிருக்கிறது

தீர்ந்துபோன நிகழ்காலத்தை
உள்ளடக்கம் குறித்து
கவலைகளற்று
இறுமாப்போடு தனக்குள்
கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது

செத்துப்போய் சேமிக்கப்பட்ட
அந்த நிகழ்காலம்
ஒப்பனையேதுமின்றி
அடைகாக்கப்படுகிறது அதனுள்ளே!

ஆனாலும்….
கண்களின் தேடலில்
விரல்களின் நகர்த்தலில்
ஒரு உணர்வின் மிச்சமோ
ஒரு உறவின் வாசமோ
ஒரு வரலாற்றின் வீச்சமோ
பிரசவமாகிக் கொண்டியிருக்கிறது
சிலநேரம் குறைப்பிரசவமாகவோ
கருக்கலைப்பாகவோ…



எழுதியது ஈரோடு கதிர்