FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: kanmani on June 19, 2012, 11:47:22 PM
-
கடந்த சில காலமாக கூகிள் நிறுவனமானது பல்வேறு துறைகளில் கால் வைத்து வருவது நாம் அறிந்ததே. கூகிள் கார்ஸ், கூகிள் கிளாஸ் போன்றவற்றை இதற்கு சான்றாக கூறலாம். அதே வகையில் இன்று கூகிள் நிறுவனம் தனது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
IT துறையில் வேலை செய்வோர், மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தொலில்செய்வோர் Dropbox என்ற சேவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்காக சிறிய விளக்கம் இதோ.
Dropbox ஒரு இணையதில் உங்கள் கோப்புகள், படங்கள், பாடல்கள் போன்றவற்றை சேமிக்கும் ஒரு சேவையாகும். இது ஒரு இலவச மற்றும் மாத வாடகைக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவையாகும். இலவசமாக 2GB உங்களுக்கு தரப்படும், பணம் செலுத்தி மேலதிக இடத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் ஸ்கைடிரைவ் (Sky Drive) என்ற பெயரில் இந்த சேவையை வழங்கினாலும், ட்ராப்பாக்ஸ், அதனது இலகுவான சேவைக்காக புகழ்பெற்றது.
இன்று கூகிள், தானும் இந்த cloud storage போட்டியில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இலவசமாக 5GB யை கூகிள் டிரைவ் வழங்குகிறது. ட்ராப்பாக்ஸ் போலல்லாது கூகிள் டிரைவ் மூலம் நீங்கள் புதிய வோர்ட், எக்ஸ்செல், பவர்பாயிண்ட் போன்ற பைல்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.
கூகிள் டிரைவ் PC, Mac, Iphone, Ipad மற்றும் Android ஆகியவற்றில் பயன்படுத்தகூடியதாக உள்ளது.
கூகிள் டிரைவ் தளத்திற்கான முகவரி https://drive.google.com
நிச்சயமாக இந்த புதிய வரவு ட்ராப்பாக்ஸ் இற்கு ஒரு சரிவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
-
Good Info..Thanks ..Drop box use pannen ippo google try panni paakuren :P