FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 01, 2011, 04:36:48 PM
-
நீ அழகிய மலர்களால்
செய்யப்பட்ட சுடர் கொடியா !!...
நீ கற்பனை என்னும்
வாசலில் உதித்தவளா !!...
நீ சிந்தைக்கு எட்டாத
வானவில்லா !!...
சிந்திக்க வைக்கும்
கவி மலரா !!...
வார்த்தை ஜாலங்கள் காட்டி
என்னை வார்த்தையற்றவன் ஆக்கினாய் !!...
பறவைகளின் கூட்டத்தில்
என்னை ஒன்றாக்கினாய் !!...
நிழல் உலகின் தேவதையே....
என் நிஜத்தில் ஒன்றாகிவிடு !!...
உதிரும் பூவாய் வந்தவளே
என் வாழ்வின் மாலையாகிவிடு !!..
-
nalla kavithai... ;)