FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 19, 2012, 02:34:06 PM
-
அக்கணத்தில் பிறப்பது செய்தி
காலம் தாழ்ந்து கசிவது ரகசியம்
அடையாளக் குறிகள்
அழகாய்ச் சுட்டினாலும்
உண்மை என்னவோ ஒன்றுதான்
-0-
சில அழைப்பிதழ்களைக் காணும்போது
கண்ணினூடாக மனதில் படிகிறது
பலருக்குள் அடர்த்தியாய்
படிந்துகிடக்கும் சாதிச் சாயம்
-0-
நீரில் எப்போதும்
மிகக் கனமானதும்
மிகச் சூடானதும்
கண்ணீர்தான்
-0-
அலங்காரம் அற்றுப் பிறக்கும் கவிதை
வாசனைத் திரவியங்களையும்
வண்ண உடைகளையும் சூடுவதில்
தன்னைத் தொலைத்துவிடுகிறது
எழுதியது ஈரோடு கதிர்