FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on June 17, 2012, 08:11:49 AM

Title: வானம் கண்டேன் வாழ்வினை கொண்டேன்
Post by: Jawa on June 17, 2012, 08:11:49 AM
உயர்வானம் கண்டேன் - என்
சிந்தனையை உயர்வென கொண்டேன்
விரிவானம் கண்டேன் - எல்லோரிடமும்
பழகும் தோழமை கொண்டேன்
தெளிவானம் கண்டேன் - வாழ்வின்
இலக்கினை தெளிவென கொண்டேன்
இருள்வானம் கண்டேன் - துன்பமும்
இணைந்ததுதான் வாழ்க்கை என்ற
எதார்த்தமும் கொண்டேன்
கருமேகங்களை கிழித்திடும்
ஒளிவானம் கண்டேன் - முயற்சித்தால்
வெற்றியுண்டென புதிய நம்பிக்கை கொண்டேன்
வானம் கண்டேன் - என்றும்
மகிழ்ந்திடும் வாழ்வினை கொண்டேன்