FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on June 17, 2012, 08:06:44 AM
-
வானளவு சிந்தித்து ஊமையாகி போன உணர்வுகள்...
வேற்றினக் காரன் என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர் என்று அன்பாய் அரவணைக்கும்
என்னை ஈன்றவள் ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன என் காதலில்
"தியாகம்" என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என் இயலாமை.