FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 15, 2012, 11:23:15 AM
-
மேகப்போர்வைக்குள் ஒளிந்துகொண்ட வெண்ணிலவே !
இரட்டை விழியில் இருந்து தப்பிவிடுவாய் என்றால்
லட்சம் விழிகள் கொண்டு காத்திருப்பேன்.....
- நட்சத்திரம்
-
வெண்ணிலவே மேகப்போர்வை விலக்கி நீ வெளியே வாராவிடில்
எங்களுள் ஒருவர் கூட பூக்கமாட்டோம்
- இரவுப்பூக்கள்
-
லட்ச நட்சத்திரங்களின் துணை கொண்டு
உனை காண கால் கடுக்க காத்திருந்தால்,
தடுமாறி தடம்மாறி தடம் பதித்து விட்டாதாய்
இடம் மாறிட செய்துவிட்டாய், இருந்தும்
மனத்திடம் மாறாமல் தொடர்ந்து தொடர்முயற்சியாய்
இரவுபூக்களின் இரக்கம் மொத்தத்தையும்
இரவல் வாங்கி, இதோ போராட்டம் புரிகிறேன்
வெண்ணிலவே , வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா ?????