FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Saam on June 14, 2012, 08:12:36 AM
-
என் தமிழ்ச் சொல் எங்கே??
காலையில் உதித்தது
ஒரு கவிதை...
நினைத்தவுடன் எழுதாவிடின்
என் மறதியால்
மரித்துப் போகும் அக்கவிதை..
நினைத்து, மறந்து,
மரித்த கவிதைகள்
கணக்கில் அடங்கா..
வேகமாய் கணினி முன்
தட்டச்சுவை திறக்க
காலையிலேயே
கணினி முன்பாயென
என் அம்மா திட்ட
எழுதியே தீர வேண்டும் என
தலைப்பு வைத்து கவிதையை
தொடங்க பட்டென்று இருள்..
என் எண்ணங்களில் அல்ல
என் அறையில்...
மாதம் ஒரு நாள் மின் துண்டிப்பு..
அந் நன்னாள் இந்நாள் என
என் அம்மா சிரிக்க
ஐயோ என் கவிதை என
என் மனம் கூப்பாடு போட
நீண்ட நாட்களுக்கு பிறகு
பேனாவை தேடியது என் கண்கள்...
பேனாவையும் வெள்ளைத்தாளும்
ஒருவழியாய் இருளில் தேடிப் பிடித்து
எழுதிய முதல் வார்த்தை "நான்"..
ஒரு நொடியில் பெரிய அதிர்ச்சி...
என்னவாயிற்று என் தமிழுக்கு??
என்னவாயிற்று என் கையெழுத்து??
சிறு குழப்பம்...
கைபேசியிலும் கணினியிலும்
ஜாலம் செய்யும் விரல்கள்
இன்று பேனா பிடிக்கையில்
ஆரம்பக்கல்வி குழந்தையாய்
கிறுக்கி கொண்டு செல்ல
நான் எழுதிய வார்த்தை கண்டு
குழம்பி போனது மனது...
ஐயோ என் தமிழ் சொல் எங்கே??
கைபேசி குறுஞ் செய்தியிலும்
கணினியிலும் ஆங்கிலத்தில்
தமிழை எழுதியதால் வந்த வினையோ?
என் மனம் துடித்தது...
"நான்" என்று ஆங்கிலத்தில்
எழுதி இருப்பதாய் பார்த்து
என் கண்களே நம்ப மறுத்தது...
கை எழுத்துக்கூட காணமல்
போயிற்று கணினியால்...
நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
தமிழை மறந்தேனோ???
இந்த கவிதை நான் படித்த கவிதைகளில் பிடித்தமான ஒன்று..நான் எழுதிய கவிதை அல்ல.
-
முதல்பதிப்பே முப்பத்து பதிப்பின் மதிப்போடு
முத்து பதிப்பாய்
உ(ன்)ள் அர்த்தத்தின் அர்த்தத்தை அற்புதமாய்
எதார்த்தமாய் பதித்த எதார்த்த பதிப்பாய்
இனிவரும் பதிப்புக்களும் எழிலான எதார்தத்தினை
இழை அளவும் இழக்காமல் இருந்து, தொடர்ந்து
பதிந்திட வேண்டும் எனும் சிறு கோரிக்கையுடன் ....
ஆசையின் ஆசை வாழ்த்துக்கள் !!!
-
Thank You!!!
-
உண்மை தேடல் உனக்குள் இருந்தால் .
உன் தமிழ் உன்னை விடுத்து எங்கும் போகாது ...
முயற்சி செய் ...
தொடர் முயற்சி செய் ...
வாழ்த்துக்கள் ! நன்றி !
-
கைபேசி குறுஞ் செய்தியிலும்
கணினியிலும் ஆங்கிலத்தில்
தமிழை எழுதியதால் வந்த வினையோ?
என் மனம் துடித்தது...
"நான்" என்று ஆங்கிலத்தில்
எழுதி இருப்பதாய் பார்த்து
என் கண்களே நம்ப மறுத்தது...
கை எழுத்துக்கூட காணமல்
போயிற்று கணினியால்...
நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
தமிழை மறந்தேனோ???
very nice kavithai saam.
aarambame amarkalamaa iruku.
enakum ippadi neraiya murai aagi iruku :)..
unga kavithai padikum podhu naan seidhatha nenachi sirichi kitten:):)