FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on June 12, 2012, 08:51:23 PM

Title: ஜனனம்
Post by: thamilan on June 12, 2012, 08:51:23 PM
மரணத்தில் இருந்தே
ஜனனம் உதிக்கிறது

ஒன்றின் மரணம்
இன்னொன்றின் ஜனனம்

இரவின் மரணம்
விடியலின் ஜனனம்

பூவின் மரணம்
காயின் ஜனனம்

கன்னிமையின் மரணம்
தாய்மையின் ஜனனம்

சூரியனின் மரணம்
சந்திரனின் ஜனனம்

புதுமையை வ‌ர‌வேற்ப‌வ‌ர்க‌ளே
ப‌ழ‌மையின் ம‌ர‌ண‌ம் இல்லையென்றால்
புதுமை ஏது
Title: Re: ஜனனம்
Post by: Global Angel on June 16, 2012, 03:31:47 AM


நிஜம் ஒன்றின் மரணத்தில் தான் மற்றொன்று உருவாகிறது ... அருமையான வரிகள்