FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 05:54:22 PM

Title: தழுவுகிறேன் நான் .....
Post by: aasaiajiith on June 12, 2012, 05:54:22 PM
அலுவலகம் முடிந்து வந்த அலுப்பில்
அப்படியே மெத்தையில் பொத்தென விழ
அடுப்பங்கரையில் இருந்து அவசரஅவசரமாய்
அவள் வந்து எனை காண ,மெத்தையில்
அசதியில் கண்ணயர்ந்து கிடக்கும் என்னை
அன்பாய் பார்த்து ,கட்டிலின் காலடியில்
அமர்ந்து அவிழ்க்க மறந்த காலணி,காலுறையினை
அலுங்காமல் அவிழ்த்து,காலடியில் இருந்து
அப்படியே தலைமாட்டிற்கு இடம்பெயர்ந்து
அசதிபோக்கும் வசதியாய் என்  நெற்றியில்
அழுந்த ஒரு முத்தம் பதிக்க ,
அடித்து பிடித்து விழித்து எழுந்து பார்த்தால்
அத்தனையும் கனவு 
அசடுவழிய ஓரிரு உச்சு கொட்டலோடு
அரைத்தூக்கதில் மீண்டும் தலையணையை
அணைத்து தழுவுகிறேன் நான் .......
Title: Re: தழுவுகிறேன் நான் .....
Post by: Dharshini on June 13, 2012, 11:27:59 PM
kavignare kanavu ellam balama iruku kanavula vantha ponu face ah parthela? kanavula vanthava nerulaium vara vazhthukal